கொரோனா வைரசுக்கு எதிராக உயிர்காக்கும் மருந்தாக ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆண்டி வைரஸ் மருந்து. எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா சிகிச்சைக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும்போது நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மருந்து குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் இரண்டு மரங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் அளித்துள்ளது ஆகிய இரண்டு மருந்துகளுக்கு சுகாதார நிறுவனம் அனுமதியளித்துள்ளது. Tocilizumah, Sarilumah ஆகிய இரண்டு மருந்துகள் கொரோனாவால் மரணம் ஏற்படுவதை தடுப்பதாகவும், வெண்டிலேட்டர் உதவியை குறைப்பதாகவும் அமெரிக்க மருத்துவக் கழகத்தின் பத்திரிகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.