Categories
அரசியல்

உயிர்கொல்லி நீட்டை…. இந்தியாவிலிருந்தே விரட்டியடிப்போம்…. கமலஹாசன் அறிக்கை…!!!

நீட் தேர்வை குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதி ஏ.கே.ராஜன் வெளியிட்ட அறிக்கையில் நீட்தேர்வால் ஏற்பட்ட தீய விளைவுகள் பட்டியலிடுப்படுகிறது. அதன்படி தமிழ் வழியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கையானது 14.4 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக சரிந்துள்ளது. இப்புள்ளி விவரங்களின் மூலம் சமூகத்திற்கும் சமுதாயத்திற்கும் இத்தேர்வானது உயிர்க்கொல்லி என்பது தெளிவாகிறது.

நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவ படிப்பில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களைவிட சிபிஎஸ்சி மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்களே அதிகமாக சேர்ந்துள்ளனர் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிசெய்துள்ளது. மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நாட்டிலேயே தமிழகம் தான் கொண்டிருந்தது. ஆனால் இத்தேர்வானது நீடிக்குமானால் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பானது சிதைவடையும். மேலும் இத்தேர்வினால் தமிழ் வழியில் பயின்ற அவர்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து வருகின்றது. தமிழ் மொழி கல்வியை உலகமுழுவதும் ஊக்குவிக்கப்படும் நிலையில்  இத்தேர்வு நம் தாய் மொழிக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது.

இந்த அறமற்ற உயிர்க்கொல்லி தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தே விரட்டி அடிக்க வேண்டும். மேலும் இத்தகைய உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வந்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு  மக்கள் நீதி மையம் சார்பாக மனமார்ந்த நன்றியையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரிடம் இக்குழுவின் பரிந்துரையின்படி விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |