Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்…!!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு

1.சாட்சிகள்

உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார்  ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டதற்கு  ஏராளமான சாட்சிகள் இருந்ததை விவிலியம் பதிவு செய்து வைத்துள்ளது. இந்த உண்மையை பதிவு செய்தவர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி பின்னர் உயிர்த்த இயேசுவை காட்சியில் கண்ட பின் மனமாற்றம் அடைந்த பவுல் அடிகளார்.

2. ரோமின் படைவீரர்கள் துவங்கினார்களா? 

உலகிலேயே கொடூரமான சைவாகிய சிலுவை சாவை  எவ்வித சலனமும் இல்லாமல் அரங்கேற்றும் வலு கொண்டவர்கள் ரோமை படைவீரர்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களது பணி நேரத்தில் தூங்கி இருப்பார்கள், அசதியாய் இருந்திருப்பார்கள், அசட்டையாக இருந்திருப்பார்கள். அப்போது இயேசுவின் சீடர்கள் இயேசுவின் உடலைத் திருடிச் சென்றார்கள் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. இது முழுக்க முழுக்க கட்டுக்கதை.

3. இயேசுவின் சீடர்களால் அவரது உடல் எடுத்துச் செல்ல முடியுமா?

இயேசு கைது செய்யப்பட்ட போது இயேசுவின் சீடர்கள் தப்பி ஓடினார்கள். தப்பித்தால் போதுமென ஒருவர் நிர்வாணமாக ஓடினார். தொலைவில் பின்தொடர்ந்த சாதாரண பணிப்பெண்ணுக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்தார். இயேசுவின் இரண்டு சீடர்கள் எருசலேமில் இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று 16 கிலோமீட்டர் தொலைவில் என்று எம்மாவுக்கு தப்பி ஓடினார்கள். எருசலேயில் தங்கியிருந்த சீடர்கள் தங்கள் வீட்டின் கதவைத் திறந்து வைத்தால் யூதர்களால் தங்களுக்கு ஆபத்து எனக் கருதி கதவை மூடியே வைத்திருந்தார்கள். இவர்களாவது இயேசுவின் உடலை திருடுவதாவது.

4.அதிகாலை வந்த பெண்களால் இயேசுவின் உடலை திருடிச் செல்ல முடியுமா?

இயேசுவின் கல்லறைக்கு அதிகாலையில் வந்த பெண்கள் நறுமணத் தைலம்பூசுவதற்காக அதன் வழியாக இயேசுவின் உடலுக்கு மரியாதை செய்ய அவர்கள் வந்தார்கள். கல்லறையை மூடி இருக்கும் கல்லை யார் புரட்டிப் தருவார்கள் என்ற குழப்பத்தோடு தான் அவர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு விரைந்தார்கள். லாசரை இயேசு உயிர்ப்பிக்கும் போது கல்லை புரட்டும் படி கட்டளை இடுகிறார். அப்போது அங்கு கூடியிருந்த ஆண்கள் கல்லை புரட்டினார்கள். பல்லாயிரக்கணக்கான எடை கொண்ட அந்தக் கல்லை வயதான அந்தப் பெண்களால் புரட்டுவதும் இயேசுவின் உடலை எடுத்து மறைப்பதும் என்பதும் இயலாத காரியம்.

5 . கல் ஏன் புரட்டப்பட்டது

இயேசுவின் கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டியாது யார் என்று தெரியவில்லை. இயேசுவா,  வானதூதர்களா   யாருக்கும் தெரியவில்லை ஆனால் பெண்கள் கல்லறை அடைந்ததும் கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். லாசரின் கல்லறையில் கல் புறப்பட்டது அதற்கு காரணம் லாசர் வெளியே வருவதற்காக. ஆனால் இயேசுவின் கல்லறையில் கல் புரட்டப்பட்டதன் காரணம் அது அல்ல. மாறாக வெளியே இருப்பவர்கள் உள்ளே சென்று இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாக இருக்கவே இயேசுவின் கல்லறையின் கல் புரட்டப்பட்டது.

6. இயேசுவின் உயிர்ப்பு உடலில் உயிர்ப்பா? அல்லது ஆவியின் உயிர்ப்பா?

இயேசுவின் உயிர்ப்பு  உடலின் உயிர்ப்பே.  ஏசுவின் உயிர் உடலில் உயிர்ப்பாக இருந்தாலும் சிறப்பான ஆற்றல் பெற்றிருந்தது. மூடியிருந்த கதவை தாண்டிச் செல்ல முடிந்தது. அதே வேளையில் தன்னுடைய சீடர்களோடு சேர்ந்து பந்தியில் அமர்ந்து உணவருந்தவும் முடிந்தது. தனது உயிர்ப்பை  சந்தேகப்பட்ட சீடருக்கும் ரோமாவுக்கும் இதோ என்னுடைய காயங்கள் என்று தொட்டுப் பார்க்க அழைக்கவும் முடிந்தது.

7. உயிர்ப்பு என்பது தொடக்கமா? முடிவா?

இயேசுவின் உயிர்ப்பு அவரது மண்ணுலக வாழ்வின் இறுதியில் நடந்தாலும் இது அனைத்திற்கும் துவக்கமாக அமைகிறது. இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் அவரே முதலில் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்தியது. இயேசுவின் உயிர்ப்பு மனுக்குலத்தின் உயிர்ப்புக்கு துவக்கமாக அமைகிறது. நாமும் இயேசுவைப் போன்று ஒருநாள் உயிர்ப்போம். நாமும் இயேசுவைப் போன்று இறந்தபின் உயிர்ப்போம் அவரோடு இணைந்து இருப்போம் என்பதற்கு துவக்கமாக அமைந்தது இயேசுவின் உயிர்ப்பு.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் அணைக்க முடியாது என்பது போல விட்டில் பூச்சிகள் ஒன்றிணைந்து கதிரவனின் வெளிச்சத்தில் மூடிவிட முடியும் காரிருளை ஏற்படுத்திவிட முடியும் என்பது போன்று இயேசுவை அடக்க நினைத்தவர்கள் மறைக்க நினைத்தவர்கள் வரலாற்றில் தோற்றுப் போனார்கள் என்பதற்கு இந்த ஏழு உண்மைகள் சான்று. இயேசு தனது உயிர்ப்பின் வழியாக இனி வாழ்வுக்கும் சாவும் சாவுக்கும் வாழ்வும்  இல்லை என்று நிரூபித்துக் காட்டினார்.

Categories

Tech |