மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் பள்ளி படித்து வந்த போது நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் இளைஞர் ஒருவரோடு சமூக வலைதளம் மூலமாக பேசி பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த இளைஞர் அந்த மாணவியுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை சந்திப்பதற்காக தோழிகளான மூன்று மாணவிகளும் பள்ளிக்குச் செல்லாமல் இந்துர் புறப்பட்டு சென்றார்கள். அங்கு சென்று இளைஞருக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்காததால் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதனை அடுத்து அங்குள்ள பூங்கா ஒன்றிற்கு சென்ற மூன்று மாணவிகளும் விஷம் அருந்தி மயங்கி விழுந்துள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.