Categories
தேசிய செய்திகள்

உயிர் போகும் நிலையிலும் கூட…. அதிக லாபம் பார்க்கும் நிறுவனங்கள்…. எழும் குற்றசாட்டு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா சூழலைக் கணக்கில் கொண்டு மருத்துவ கருவிகளின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆக்சிஜன் செறிவூட்டிகள் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் ரூபாய் 45 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அக்கருவியின் மாத வாடகை ரூ.5000 இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |