Categories
உலக செய்திகள்

உயிர் போகும் நிலையில் காதலன்…! காதலி செய்த அருவருப்பான செயல்… அமெரிக்காவில் பரபரப்பு தீர்ப்பு ….!!

அமெரிக்காவில் உயிருக்கு போராடிய காதலனிடம் தவறாக நடந்து கொண்ட காதலிக்கு 16ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர் மேகன் அண்ணி வல்தல். இவர் பிராண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். அண்ணி கடந்த 2019ஆம் ஆண்டு பிராண்டன் வீட்டிற்கு சென்று தங்கி இருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் ஹெராயின் போதையை உட்கொண்டனர். அதிக அளவில் பிராண்டன் ஹெராயின் உட்கொண்டதால் உயிருக்கு போராடியபடி இருந்தார்.

அப்போது பிராண்டன் அவசர உதவி எண்ணுக்க சொல்லி மேகன் அண்ணி வல்தலிடம் சொன்ன போது, அண்ணி சிரித்துக் கொண்டும், காதலன் பிராண்டன் மேல் கை வைத்து தவறான செயல்களில் ஈடுபட்டும் அதைத்தானே வீடியோவாக பதிவு செய்தும் உள்ளார்.பிறகு தாமதமாக அவசர உதவி எண்ணை அழைத்த நிலையில் தகவல் அறிந்து வந்த ஊழியர்கள் பிராண்டனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பிராண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்திற்கு உண்டான ஆதாரங்களை சேகரித்து அண்ணியை கைது செய்துள்ளனர்.  மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவசர உதவி எண்ணுக்கு தாமதாக அழைத்ததற்கும்,  உயிருக்கு போராடிக் கொண்டவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்கும் அன்னிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |