Categories
அரசியல் மாநில செய்திகள்

உரக்கச் சொல்லி, உளறிய உதயநிதி… சமூக வலைத்தளங்களில் சிக்கிய பரிதாபம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் போல அவரின் மகன் உதயநிதி மேடையில் உளறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் மேடைகளில் பேசும் போது தனது கவனக்குறைவால் உளறுவது வழக்கமானது. அவர் எப்போதும் துண்டு சீட்டு இல்லாமல் பேச மாட்டார் என அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் அவர் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் ஸ்டாலின் பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வீடியோ வடிவில் வைரலாகி வருகிறது. தற்போது தந்தை பாணியில் அவரின் மகன் உதயநிதி உளற ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், உதயநிதி ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

அவர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போலீசாரின் தடையை மீறி இரண்டு நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் நிச்சயம், 2001 ஆம் ஆண்டில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுக தலைவர் முதல்வராவார்” என்று அவர் கூறினார். அடுத்த வருடம் 2021 தேர்தலை 2001 தேர்தல் என்று உதயநிதி உளறியதைக் கேட்டு திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது உதயநிதியின் உளறல்கள் மீம்ஸ் வீடியோ என சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

Categories

Tech |