Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரம் வழங்கப்படவில்லை…. விவசாயிகள் திடீர் சாலை மறியல்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

வேளாண் சங்கம் சார்பில் முறையாக உரம் வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கீழராமநதி ஊராட்சியில் கூட்டுறவு வேளாண் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சங்கத்தில் விவசாயிகளுக்கு முறையாக உரம் வழங்கப்படாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுவாதாக விவசாயிகள் புகார் அளித்து வந்துள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் கமுதி-அருப்புகோட்டை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த துணை சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னரே சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |