சென்னை மாநகராட்சி பகுதியில் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனையை 50 டன் வரை உயர்த்த சென்னை மாநகராட்சியின் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை சென்னையில் 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கெட் உரம் 15 முதல் 20 வரை விற்பனையாகி வருகிறது.