Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உரிமம் பெறுவது கட்டாயம்”…. கடைகளில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மார்க்கெட், பேருந்து நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவு பொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு இருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 2 கடைக்காரர்களிடமிருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து உரிமம் இன்றி உணவு பொருட்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |