Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மர்ம நபர் மோசடி செய்த பணத்தை அதிகாரிகள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சாமு தம்பி மரைக்காயர் தெருவில் செய்யது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு வங்கியிலிருந்து செய்யதின் அலைபேசிக்கு அழைப்பு வந்ததாக தெரிகிறது. அதில் பேசிய நபர் செய்யத்தின் ஏ.டி.எம்.கார்டை முடக்க போவதாகவும், அதனை சரிசெய்ய ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய செய்யது அவருடைய அலைபேசிக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.44,740 திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்யது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்யத்தின் பணத்தை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |