ஸ்கூட்டரை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவழந்தூர் தோப்பு தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அதன்பின் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி மெயின் ரோட்டில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் ராஜபாண்டியை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.