திருநெல்வேலியில் மர்ம நபர்கள் வீட்டிலிருந்த நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுப்பையா அவரது வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதற்கிடையே அவரது நண்பரான செந்தில் கணேஷ் என்பவர் பேட்டையில் வசித்து வருகிறார். இவர் எப்போவாவது சுப்பையாவின் வீட்டிற்கு சென்று அதனை பராமரித்து வருவார்.
இதனையடுத்து சம்பவத்தன்று சுப்பையாவின் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகையையும், பணத்தையும், வெள்ளி பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.