மாநிலத்தில் ஆங்கிலம், தமிழ் போன்ற 2 மொழிகள் மட்டுமே பின்பற்றப்படும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், யாரையும் துன்புறுத்துவதற்காக இருமொழிக் கொள்கையை அரசு கடைபிடிக்கவில்லை. மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கையை முன்னிறுத்துகிறோம். விருப்பம் இருப்பவர்கள் அவர்கள் விரும்பும் மொழியை கற்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, 3வதாக இந்தியை படிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதை மட்டுமே தமிழக அரசு எதிர்க்கிறது. யாரையும் துன்புறுத்தும் நோக்கில் இருமொழிக்கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கவில்லை. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவே இருமொழிக் கொள்கையினை முன் நிறுத்துகிறோம் என அவர் தெரிவித்தார்.