Categories
அரசியல் மாநில செய்திகள்

உரிமையை பறிக்கும் பாஜக…! சி.எம் பின்னால் சிறுத்தைகள் இருப்போம் … உறுதியாக சொன்ன எம்.எல்.ஏ

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு, பட்டியல் வகுப்பாளருக்கு எதிரான வெறுப்பு என வெறுப்பின் அடிப்படையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற பாஜக, மாநிலங்களின் உரிமையை பறிப்பதிலும் குறியாக இருக்கிறது. அதனுடைய விளைவாகத்தான் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டும்,

அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இது இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்குவது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமையை கொச்சைப்படுத்துவது, அரசியல் சாசனத்தை அவமதிப்பது. அந்த அடிப்படையில் தான் ஆளுநர் என்கிற அடையாளத்திற்கு பின்னால் இருந்து இயங்குகிற அரசியலை அம்பலப்படுத்த அதை கண்டிக்க, விடுதலை சிறுத்தைகள்  வெளிநடப்பு செய்தோம்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்கள். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் இந்த சட்டம் நடைபடுத்தப்படுவதற்கு, உரிய முடிவை எட்டவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள். நிச்சயமாக விவசாயிகளின் போராட்டம் வென்றதை போல, தமிழ்நாட்டிலே ஜல்லிக்கட்டுக்கான பண்பாட்டு எழுச்சி வெற்றி கண்டது போல, தமிழக முதல்வர் அவர்கள் முன்னெடுக்கிற இந்த முயற்சி வெற்றி பெரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்புகிறோம். தமிழக முதல்வருக்கு பின்னால் நாங்கள் அணிதிரண்டு நிற்போம் என தெரிவித்தனர்.

Categories

Tech |