Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட…. “10 1/2 டன் பறிமுதல்”…. என்ன தெரியுமா…?????

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 10 1/2 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை  சோதனை செய்ததில் நெல்மூட்டைகள் இருந்தது. அப்பொழுது போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தார்கள்.

அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி, நாகமங்கலத்தைச் சேர்ந்த வியாபாரி முருகேசன் என்பது தெரிந்தது. அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி தஞ்சையில் உள்ள கும்பகோணம் பகுதியில் அதிக விலைக்கு விற்க எடுத்து வந்ததும் உரிய ஆவணங்கள், ரசீதுகள் முறையாக இல்லாததும் தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் 10 1/2 டன் நெல்லை பறிமுதல் செய்து அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்கள். மேலும் இதுகுறித்து லாரி டிரைவர் மற்றும் வியாபாரியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |