பறக்கும்படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 2 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும்படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு பகுதியில் பறக்கும்படை அதிகாரி விமல்ராஜ் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2,20,000 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காரில் இருந்த திருச்செங்கோடு தாஜ் நகரை சேர்ந்த செல்வகுமாரிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் கோவில் விஷேசத்திர்க்காக வசூல் செய்த பணம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணம் வசூல் செய்ததற்கான உரிய ரசீது இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.