Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 180 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -விருதுநகர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையில் செல்வராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 57 ஆயிரத்து 180 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டனர்.

Categories

Tech |