உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 55 தீப்பெட்டி பண்டல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் தாசில்தார் ரங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 55 தீப்பெட்டி பண்டல்களை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக விற்பனை வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சரக்கு வாகன ஓட்டுனரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் பெற்றுக்கொண்டு சரக்கு வண்டி மற்றும் தீப்பெட்டி பண்டல்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.