உரிய ஆவணம் மின்றி காரில் கொண்டுவரப்பட்ட 84 ஆயிரத்து371 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விமல்ராஜ் என்பவர் உரிய ஆவணம் மின்றி 84 ஆயிரத்து371 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி கமிஷனர் முஸ்தபா கமாலிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.