Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சொந்தமானது…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாசில்தார் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |