உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்ச ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செந்திகுமார் வங்கியில் செலுத்துவதற்காக அந்த பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.