Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ….போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விவேக் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரிசி வியாபாரிகள் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |