ஆவணமின்றி கொண்டுவந்த 65 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையின் போது அவர்களிடம் 65 ஆயிரத்து 101 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த பணத்திற்கான சரியான ஆவணம் ஏதும் அவர்களிடம் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரி சுமதியிடம் ஒப்படைத்துள்ளனர். .