கடையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பாரம் அதிகம் ஏற்றி வந்த டிராக்டர் டிரைவருக்கு பத்தாயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமலிங்கபுரம் கிராம பகுதியில் கோவிந்தாபேரி பீட் வனகாப்பாளர் பெனாசீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து வனக்காப்பாளர் சோதனை செய்தார். அதில் உரிய ஆவணங்கள் இன்றி அளவுக்கதிகமாக விறகுகளை ஏற்றி வந்துள்ளனர். இதையடுத்து வனக்காப்பாளர் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ 10000 அபராதம் விதித்தார்.