உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பைபாஸ் சாலையில் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி உள்பட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை அதிகாரிகள் நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தீப்பெட்டி நிறுவனத்திற்கு பணியாளர்களை காரில் ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள் அந்த காரை பறிமுதல் செய்ததோடு, உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று வாகனங்களுக்கும் 3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, தொடர்ந்து வாகன சோதனை நடைபெறும். உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வோம். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.