உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைகள் ஆனந்தராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் நாமக்கல்லை சேர்ந்த வெங்காய வியாபாரிக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது