Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உரிய ஆவணம் எங்கே”….? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 46 லட்சம் ரூபாய் பறிமுதல்… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்தாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அந்த ரயிலில் இருந்து சந்தேகப்படும்படியாக ஒரு நபர் இறங்கி வருவதை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் வைத்திருந்த இரண்டு பைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 46 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நபர் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி (55) என்பது தெரியவந்தது. இவர் தான் வேலை செய்யும் வேலூரில் உள்ள நகைக்கடைக்கு நகை விற்பனை செய்ததால் வர வேண்டிய பணத்தை விஜயவாடா சென்று பெற்றுக் கொண்டு தனது ஊருக்கு செல்வதற்காக விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து இருக்கின்றார். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் பணத்தை எடுத்து வந்தால் அவரிடம் இருந்து 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |