Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய நிவாரணம் கிடைக்கும்…. யாரும் கவலைப்படாதீங்க…. நம்பிக்கையூட்டிய மத்தியக் குழு …!!

புரெவி புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு வந்த மத்தியக் குழு, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தது. பாம்பன் பகுதிக்கு சென்ற அக்குழு, புயலால் சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பார்வையிட்டது. தொடர்ந்து, குந்துகால் துறைமுகத்தில் இருந்து இரண்டு நாட்டிகல் தூரம் கடலில் பயணித்து சேதமடைந்த விசைப்படகுகளை மத்தியக் குழு பார்வையிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவினர், சேதமடைந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |