நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பெறும் பிரச்சினையாக உருவெடுத்தது.
வாடகை தாய் விவகாரத்திற்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர், மனைவியும், நடிகையுமான நயன்தாராவின் போட்டோவை கையில் வைத்துக் கொண்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள், திருமணத்திற்கு பின்தான் விக்கிக்கு காதல் அதிகம் ஆகுதுபோல என கமென்ட் செய்து வருகின்றனர்