Categories
மாநில செய்திகள்

உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதிய தாய்… இன்னும் நான் என்ன செய்ய?… வேதனையின் உச்சம்…!!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் உருக்கமான கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

இதுகுறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? என்று உருக்கத்துடன் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். பதிலை மாநில அரசு தான் சொல்ல வேண்டும். மாநில அமைச்சரவை முடிவு, மாநில உரிமையை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |