முன் விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான் நல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேஷுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்குமிடையே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷ் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயபிரகாஷ் அங்கு சென்று மகேஷிடம் தகராறு செய்ததோடு, அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த மகேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.