Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறை….. மலை ரயில் பயணம் ரத்து…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…!!

மழை காரணமாக பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஹில்குரோவ்-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தில் பாறை ஒன்று உருண்டு விழுந்து விட்டது. மேலும் மண்சரிவால் மரமும் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்து விட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 111 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு மலை ரயில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து தண்டவாளத்தில் பாறை விழுந்து கிடப்பது குறித்து எஞ்சின் டிரைவருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் மலை ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அதன்பிறகு ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாறை மற்றும் மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லாறு ரயில் நிலையத்திற்கு மலை ரயில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து 4 அரசு பேருந்துகளில் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அங்கு கனமழை பெய்வதால் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளத்தில் விழுந்த பாறை மற்றும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |