Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உருமாறிய கொரோனாவின் தாக்கம்…. அதிகரிக்கும் உயிர் பலி…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்….!!

தென்னாப்பிரிக்காவில்  உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது .

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது.

 

இருந்தாலும் உருமாறிய வைரஸினால் அந்நாடு பெறும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 16-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இங்கு வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 15,09,124 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 49,667 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் 14.24 லட்சமாகும்.உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்குகிறது.

Categories

Tech |