Categories
மாநில செய்திகள்

“உருமாறிய கொரோனா” அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. பாதுகாப்பு பக்காவா இருக்கு…!!

உருமாறி இருக்கும் புதிய தொட்டு தமிழகத்திற்குள் வராமல் இருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தற்போது உருமாறி இருக்கும் கொரோனா தொற்று முந்தைய வைரசை விட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து விமான சேவைகளும் இந்தியாவிற்கு வருவதை தவிர்க்க பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு இயக்கக் கூடிய அனைத்து விமானங்களும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக சென்னையில் இருந்து இரண்டு விமானங்கள் தினமும் லண்டனுக்கு இயக்கப்பட்டு வந்தது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானம் சென்னையிலிருந்து லண்டன் செல்ல மற்றொரு விமானம் லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு விமானங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கிருந்து டெல்லி சென்று டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வாரத்திற்கு 25 விமான சேவைகள் இங்கிருந்து லண்டனுக்கு இயக்கப்பட்டு கொண்டிருந்தது.

அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது நவம்பர் 25 இல் இருந்து பார்த்தால் தற்போது வரை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு தமிழகத்திற்கு 1088 பேர் வந்துள்ளனர். அதில் நேற்றைய தினம் மட்டும் 15 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் புதிய மாற்றம் அடைந்த கொரோனா தான் அவருக்கு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் தமிழக சுகாதார துறை ஈடுபட்டுள்ளது.

மேலும் முன்பிருந்த நடைமுறைகளில் சிறிய மாற்றத்தை விமான நிலையத்தில் செய்துள்ளனர். அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் 76 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என்ற சான்றிதழை எடுத்து வந்தால் அவர்கள் வீட்டிற்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பப்படுவார்கள் என இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இல்லாமல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் RTPCR பரிசோதனை மேற்கொண்ட பிறகு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்ததும் பாசிட்டிவ் வந்தால் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். நெகட்டிவ் வந்தால் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட அனுப்பி வைக்கப்படுகின்றனர். கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் தற்போது வரை தமிழகம் வந்த 1088 பயணிகளிடம் சுகாதாரத் துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சென்னை மட்டுமில்லாமல் டெல்லி கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கும் லண்டனில் இருந்து விமானம் வருகின்றது. அங்கு வந்து பின்னர் ரயில் மார்க்கமாக பேருந்து மார்க்கமாக தமிழகத்திற்கு வரக்கூடும் என்பதால் தமிழக எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இரண்டாவது முறையாக உருமாறி  இருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |