பிரிட்டன் உடனான விமான போக்குவரத்து சேவை ரத்து ஜனவரி 7 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 31 வரை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் விரிவாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஜனவரி 7 வரை தான் இந்த தற்காலிக தடை என்றும் அதற்குப் பிறகு பிரிட்டனிலிருந்து விமானம் வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவ்வாறு விமானத்தில் வருபவர்களை கையாளும் விதம் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் விரிவாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் நேற்றைய தினம் ஹர்தீப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா உள்ளதா என்பதை கண்டறிவதற்கான கட்டமைப்பு வசதிகளை விமான நிலையங்களில் உருவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தான் தற்காலிக விமான சேவை ரத்து என்பது அடுத்த ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.