உருமாறிய புதிய கொரோனா எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனோ சாதாரண கொரோனாவைவிட 70% வீரியம் மிக்கது. மேலும் இந்த கொரோனோ வேகமாக பரவுவதற்கு, மனிதனின் தொண்டையிலேயே வேகமாக இனப்பெருக்கம் செய்து வருவது தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் படி உருமாற்றம் பெற்ற இந்த கொரோனோ நோயாளிகளின் மூக்கிலும், தொண்டையிலும் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், சாதாரண கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் இருந்து மிக அதிக அளவில் வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனாலேயே இந்த புதிய கொரோனா எளிதில் பரவுகிறது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த ஆய்வின் தலைவர் Mickel Kidd கூறுகையில், இந்த ஆய்வின் முடிவுகள் உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்த நபர்களின் உடலில் எவ்வாறு பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க உதவியுள்ளது. இருப்பினும் அது எவ்வாறு வேகமாக பரகிறது? என்பதை கண்டுபிடிக்க கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆய்வானது பிற ஆய்வுகள் உடன் ஒப்பிடப்பட வேண்டியுள்ளது. இருப்பினும் மாதிரிகளில் காணப்படும் அதிக அளவிலான வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் தீவிரம், வைரஸின் பரவும் திறனுக்கும் காரணமாக உள்ளது என்று கருதப்படுகிறது.