டெல்லியில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆந்திரா தப்பிச்சென்ற பெண் இன்று காலை பிடிபட்டார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லண்டனில் இருந்து வெளிவந்த பெண்ணுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதியானது. டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட அவர், அங்கிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திரா தப்பிச் சென்றார். இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயவாடாவில் அந்தப் பெண் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி உள்ளனர்.