Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா தொற்று வைரஸான ஒமைக்ரான் இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.

உருமாறிய கொரோனா தொற்று வைரஸான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய அவதாரத்தை எடுத்துள்ளது. இதையடுத்து இந்தியா அமெரிக்கா, பிரிட்டன், உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனவே உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது.

இந்த தொற்றால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித், நாடு முழுவதும் 336 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சர்வதேச பயணிகளுடன் இவர்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம் என்றும், அவர் கூறியுள்ளார். ஒமைக்ரான் வைரஸ் தொற்று பிரிட்டனில் சமூக பரவலாக மாறியுள்ளதாக அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |