கொரோனா காலத்தில் அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வதால் அரசியல் கட்சியினர் பேரணி, கூட்டம் உள்ளிட்டவகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி வருவதால் இதில் நீதிமன்றம் புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.