Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… புதிய கட்டுப்பாடு விதிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அதனால் இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு விதித்துள்ளது. அதன்படி பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஏழு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிகுறி இல்லாதவர்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கென தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |