Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்…. வீரியமும், வேகமும் கொண்டது… தடுப்பூசி வேலை செய்யாது… மத்திய அரசு எச்சரிக்கை …!!

நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ்  அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில்  தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா  தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 213ஆக உயர்ந்தது. இதில் 187பேருக்கு பிரிட்டன் கொரோனா பரவியது.

இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் வீரியமும், வேகமுமாக இருப்பதாகவும்,  பரவும் தன்மையும் கொண்டது என்றும், இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டரிடம் கொரோனா தடுப்பூசி எந்த வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலிருந்து திரும்பியவர்களிடம் கொரோனா பரிசோதனையை தீவிரமாக அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

Categories

Tech |