Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உருளைக்கிழங்கு பிரியரா நீங்க…அப்போ இந்த ரைஸ் செய்யுங்க…!!

அஸ்ஸாம் மசாலா ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி                                 – ஒரு கப்
உருளைக்கிழங்கு/காலிஃப்ளவர் – ஒரு கப் நறுக்கியது
கரம் மசாலாத்தூள்                             – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்                                      – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல்                                        – தலா ஒரு டீஸ்பூன்
நெய்                                                             – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்                                             – 1 நறுக்கிக்கொள்ளவும்
உப்பு                                                             – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து கொள்ளவும். அதில் 2 டேப்ளேஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி துருவல், உருளைக்கிழங்கு அல்லது காலிஃப்ளவர், தேவையான அளவு உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

பின்பு ஜீரக சம்பா அரிசி ஒரு கப், கரம் மசாலாத்தூள் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்                                      – 1 டீஸ்பூன் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வைக்கவும். பிரஷர் அடங்கியதும் எடுத்து பரிமாறவும். இப்போது அஸ்ஸாம் மசாலா ரைஸ் ரெடி.

Categories

Tech |