வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்ற தென்மேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மத்திய வட இந்தியாவில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் , ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.