தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். பின்னர் இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 600 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 690 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலும் பிறகு மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும் நகரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.