Categories
தேசிய செய்திகள்

உருவ கேலியால் மனமுடைந்த சிறுவன் குவாடனுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் வழங்கிய கவுரவம்! 

உருவ கேலியால் மனமுடைந்த சிறுவன் குவாடனுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைக்க வைத்து கவுரவப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடன் பெய்ல்ஸ். பிறப்பிலேயே மிகவும் அரிதான நோயினால் பாதிக்கப்பட்ட குவாடனின் கை கால்கள் போதிய வளர்ச்சி இன்றி குட்டையாகவும், தலை மட்டும் பெரிதாகவும் உள்ளது. இதனால் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்களின் கேலிக்கு ஆளானான். ஒரு கட்டத்தில் கேலி கிண்டல்களை பொறுக்க முடியாமல், தன்னை கத்தியால் குத்தி கொன்றுவிடுமாறு, தாயிடம் கதறி அழுதான். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யராக்கா, சிறுவனின் அழுகையை தனது மொபைல் போனில் படம்பிடித்து இது போன்ற வளர்ச்சி குறைவான குழந்தைகளை உருவ கேலி செய்து மனதை புண்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக ஊக்கமூட்டும் விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறுவனுக்கு ஆதரவாக, ‘டுவிட்டர்’ மூலம் நிதி திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் மூன்று கோடி ரூபாய் நிதி கிடைத்தது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற ‘ரக்பி சாம்பியன்ஷிப்’ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும் கவுரவும், சிறுவன் குவாடனுக்கு அளிக்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறுவன் குவாடன் பந்துடன் நடந்து வருகையில் திரண்டிருந்த கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் மகிழ்ச்சியாக காணப்பட்டார். உருவ கேலி காரணமாக மனமுடைந்து போயிருந்த சிறுவனுக்கு இந்த சம்பவம் பெரும் உற்சாகத்தை அளித்ததாக அவனது தாயார் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |