நடிகை காஜல் அகர்வால் தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து மக்களின் மனதில் நின்றவர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை சிலர் உருவ கேலி செய்து பதிவிட்டு வந்துள்ளனர்.
இதனால் நடிகை காஜல்அகர்வால் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் “எனது வாழ்க்கையில், எனது உடலில், எனது வீட்டில், மிகக் குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் அற்புதமான புதிய மாற்றங்களை சமீப காலமாக நான் சந்தித்து வருகிறேன். மேலும், குறிப்பிட்ட சில கருத்துக்கள், உடல் கேலி பதிவுகள் எதற்கும் உதவாது. அன்பாக இருக்க கற்றுக் கொள்வோம். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன், வாழு, வாழ விடு” என குறிப்பிட்டு அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.