திருபுவனை பாளையம் பாலாஜி நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவரது மனைவி செண்பகவள்ளி (38) நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார்.
இதனையடுத்து மர்ம நபர் தூங்கி கொண்டிருந்த செண்பகவள்ளி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார். இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த செண்பகவள்ளி கூச்சல் போட்டார். இதைக் கேட்டதும் அருகில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் ரமேஷ், அந்த மர்ம ஆசாமியை பிடிக்க முயற்சி செய்தார்.
ஆனால் அந்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து புகாரின்படி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று செண்பகவள்ளியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.