Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரிடம் ரூ.70 லட்சம் கடன் வாங்கி மோசடி…. 4 பேர் மீது வழக்கு…. பெரும் பரபரப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான புத்தேரி பகுதியை சேர்ந்த சிவகார்த்திக், அவருடைய தாயார் அம்பிகா, சகோதரி விஜி, மற்றும் சுடலைமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவகார்த்திக் புதிய தொழில் தொடங்க கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் பாரதி முதலில் ரூ.19 லட்சத்தை 97 ஆயிரமும், தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.50 லட்சமும் மொத்தம் 69 லட்சத்தி 97 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட 4 பேரும் திரும்பக் கொடுக்காமல் காசோலைகளை மட்டும் கொடுத்து மோசடி செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாரதி 1 வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி, சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு, சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலன் ஸ்டீபன் ஆகியோர் சிவகார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |