Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உறவினரின் நினைவு தினம்… தொழிலாளி செய்த செயல்…. தீக்கிரையான பொருட்கள்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரின் நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டில் ஊதுபத்தி கொளுத்தி வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் கூரை வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிவக்குமாரின் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த சான்றிதழ்கள், மிக்ஸி, கிரைண்டர் போன்ற 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |